ADDED : ஜூன் 21, 2025 12:34 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் ஜிடிஎன் சாலை அரசு உதவிப் பெறும் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் பழநி பஸ்கள் நிற்கும் இடம் எதிரே இரு குழுவாக பிரிந்து மோதலில் ஈடுபட்டனர்.
புத்தகப் பையை துாக்கி வீசியும், பொருள்களை துாக்கி எறிந்தும் தாக்குதலில் ஈடுபட அங்கிருந்த பயணிகள் ஓடினர்.
போலீசார் வருவதை பார்த்த மாணவர்கள் தப்பினர். சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துக்கு போலீசாார் தகவல் தெரிவித்தனர்.