ADDED : பிப் 11, 2024 01:03 AM
வடமதுரை: கொம்பேறிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழா ஊராட்சி தலைவர் ராஜரத்தினம் தலைமையில் நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் பரமேஸ்வரி நீலக்கண்ணன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் கணேசன் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் வயநமசி ஆண்டறிக்கை வாசித்தார். மாவட்ட கவுன்சிலர் தண்டாயுதம், ஊராட்சி துணைத்தலைவர் கருப்பையா, உடற்கல்வி ஆசிரியர் ஜான்ரபிரிட்டோ, ஆசிரியர் ஆல்பர்ட் ரிச்சர்டு பேசினர்.
* அய்யலுார் தங்கம்மாபட்டி அரசு துவக்கப் பள்ளி ஆண்டு விழா விழா பேரூராட்சி கவுன்சிலர் மாலா தலைமையில் நடந்தது. வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர் சுமதி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் அனுராதா வரவேற்றார்.
உதவி ஆசிரியை புவனேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் அபிராமி, பி.டி.ஏ., தலைவர் பானுமதி, உதவி ஆசிரியை தனலட்சுமி பேசினர்.