ADDED : ஜன 18, 2024 06:18 AM

தொப்பம்பட்டி : பழநி தும்பலபட்டியில் இயங்கி வரும் சங்கர் பொன்னர் மேல்நிலைப் பள்ளியில் 24 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னாள் ஐ.ஜி.,பாரி,சங்கர் பொன்னர் அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் மருது, தலைவர் நடராஜன், செயலாளர் தர்மலிங்கம் தலைமையாசிரியர் ரச்சுமராஜுபங்கேற்றனர்.


