ADDED : மே 11, 2025 05:17 AM

ஆயக்குடி: பிளஸ் 2 தேர்வில் பழநி ஆயக்குடி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி லாவண்யா 600க்கு 588 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் இயற்பியல் கணினி அறிவியலில் 100, வேதியியல் பாடத்தில் 99, ஆங்கிலத்தில் 98,
தமிழில் 96, கணிதத்தில் 95 மதிப்பெண் பெற்றுள்ளார். ரம்யா 585 , சுபிக் ஷா 582 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பள்ளியில் இயற்பியலில் இரண்டு , கணினி அறிவியலில் ஐந்து பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சாதித்த மாணவர்களை பள்ளி தாளாளர் செல்வராஜ், முதல்வர் காசி ஆறுமுகம் வாழ்த்தினர்.