/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அனுமதியின்றி செயல்பட்ட மணல் தொழிற்சாலைக்கு சீல் அனுமதியின்றி செயல்பட்ட மணல் தொழிற்சாலைக்கு சீல்
அனுமதியின்றி செயல்பட்ட மணல் தொழிற்சாலைக்கு சீல்
அனுமதியின்றி செயல்பட்ட மணல் தொழிற்சாலைக்கு சீல்
அனுமதியின்றி செயல்பட்ட மணல் தொழிற்சாலைக்கு சீல்
ADDED : ஜூன் 24, 2025 03:12 AM
குஜிலியம்பாறை: பாளையத்தில் அனுமதி இன்றி செயல்பட்ட மணல் தொழிற்சாலைக்கு புவியியல் சுரங்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மாவட்டத்தின் வடகோடியில் உள்ள குஜிலியம்பாறை காடுகளும், பாறைகளும் மட்டுமே நிறைந்த பகுதி. இப்பகுதியில் முறையான அனுமதியின்றி கல் குவாரிகள், மணல் தொழிற்சாலைகள் செயல்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து புவியியல், சுரங்கத்துறை உதவி இயக்குனர், வருவாய்த் துறையினர் பாளையத்தில் ஆய்வில் ஈடுபட்டனர்.
அங்கு பாலகிருஷ்ணன் என்பவரது நிலத்தில் இருந்து செம்மண்ணை அனுமதியின்றி எடுத்து அதை சுத்தப்படுத்தி ஆற்று மணல் போல மாற்றும் ஆலை செயல்பட்டது தெரிந்தது. இதையடுத்து தொழிற்சாலைக்கு சீல் வைத்த அதிகாரிகள் இயந்திரங்கள், 4 யூனிட் மணலை கைப்பற்றினர். மேலும் பாலகிருஷ்ணன், இயந்திர ஆப்பரேட்டர் வடமதுரை தென்னம்பட்டியைச் சேர்ந்த பழனி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.