/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 25, 2025 03:42 AM

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
துாய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை 10 ஆயிரமாக உயர்த்தி ஊராட்சிகள் மூலம் ஊதியம் வழங்கவேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம் ரூ.15ஆயிரம் வழங்கவேண்டும். தூய்மை காவலர்களுக்கு குடும்ப நலநிதி பிடித்தம் செய்து, இறப்பு ஏற்பட்டால் ரூ.5 லட்சம் இழப்பீடு நிதி வழங்கவேண்டும், ஊராட்சிசெயலாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை, தேக்க நிலை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கையைவலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மணிக்கூண்டு அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி செயலர்கள் சங்க மாவட்ட தலைவர் பாண்டியராஜ் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்க மாநிலத்தலைவர் சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்டனஉரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், துாய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி பராமரிப்பாளர்கள், ஊராட்சி கணினி உதவியாளர்கள்,ஊராட்சி செயலர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.