ADDED : அக் 13, 2025 03:47 AM
வடமதுரை : வடமதுரையில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு விழா, விஜய தசமி விழா நடந்தது.
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.,) நுாற்றாண்டு விழாவையொட்டி நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் விழிப்புணர்வு ஊர்வலம், விழா நடத்தி வருகின்றனர்.
வடமதுரையில் நடந்த நுாற்றாண்டு விழாவிற்கு திருக்கோயில் புனரமைப்பு சேவகர் லோகநாதன் தலைமை வகித்தார்.
ஹிந்து முன்னணி தென் பாரத அமைப்பாளர் பக்தவசலம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ், நிர்வாகிகள் சுப்பிரமணி, முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில் பயிற்சி, இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம் பண்பாடுகள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ்., சேவைகள் குறித்து விளக்கி பேசினர்.


