/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கல்வி உதவித்தொகை தருவதாக கூறி ரூ.39 ஆயிரம் 'அபேஸ்' கல்வி உதவித்தொகை தருவதாக கூறி ரூ.39 ஆயிரம் 'அபேஸ்'
கல்வி உதவித்தொகை தருவதாக கூறி ரூ.39 ஆயிரம் 'அபேஸ்'
கல்வி உதவித்தொகை தருவதாக கூறி ரூ.39 ஆயிரம் 'அபேஸ்'
கல்வி உதவித்தொகை தருவதாக கூறி ரூ.39 ஆயிரம் 'அபேஸ்'
ADDED : மே 21, 2025 02:19 AM
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் 11ம் வகுப்பு மாணவருக்கு கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக கூறி, மாணவரின் தந்தை வங்கி கணக்கிலிருந்து ரூ.39 ஆயிரத்தை அபேஸ் செய்த டில்லி இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவரின் தந்தைக்கு அலைபேசியில் பேசிய நபர், உங்களது மகனுக்கு கல்வி உதவித்தொகை வந்திருப்பதாக கூறி , மாணவரது தந்தையின் வங்கி கணக்கு எண், ஏ.டி.எம்., கார்டு எண், 'ஜி பே' கியூ ஆர் கோடு போன்ற விவரங்களை பெற்றுள்ளார். இந்நிலையில் வங்கிக் கணக்கில் ரூ.39 ஆயிரம் எடுக்கப்பட்டது. திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப்பிடம் புகார் அளிக்கப்பட்டது. சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., தெய்வம், இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்துமேரி, தொழில்நுட்ப ஆய்வாளர் லாய்டு சிங் விசாரணை மேற்கொண்டனர்.
நுாதன திருட்டில் ஈடுபட்டது டில்லியை சேர்ந்த ஆசிஸ் கனோஜியா 25 ,என்பதும், இவர் தஞ்சாவூர், வேலுார் பகுதிகளில் ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்டு கைதாகி புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டது தெரியவந்தது.
இதை தொடர்ந்து ஆசிஸ் கனோஜியாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இதன் பின் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.