ADDED : ஜூன் 14, 2025 12:21 AM

திண்டுக்கல்: சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும்.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகி தீர்ப்பு பெற்ற தமிழக அரசு, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு முக்கியத்துவம் அளித்து சாலைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் திண்டுக்கல் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.