/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குழாய் உடைப்பால் சேதமான ரோடால் விபத்து குழாய் உடைப்பால் சேதமான ரோடால் விபத்து
குழாய் உடைப்பால் சேதமான ரோடால் விபத்து
குழாய் உடைப்பால் சேதமான ரோடால் விபத்து
குழாய் உடைப்பால் சேதமான ரோடால் விபத்து
ADDED : ஜூன் 02, 2025 12:43 AM

ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கத்திலிருந்து திண்டுக்கல், சின்னாளபட்டி குடிநீர் திட்ட குழாய்கள் ஆத்துார் காலனி அருகே ரோட்டை கடக்கின்றன. அடிக்கடி குழாய் உடைப்பால் பராமரிப்பிற்காக ரோட்டை தோண்டுவது வாடிக்கையாகிறது. இப்பகுதியை மூடுவதற்காக உயரமான மண்மேடு அமைக்க ஆத்துார் பஸ் ஸ்டாப் முதல் காலனி வரை 200 மீட்டருக்கு ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இப்பகுதியில் பலரும் விபத்தில் சிக்குகின்றனர்.
...........
விரைவில் சீரமைப்பு
ரோடை சீரமைத்து 5 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இதனை புதுப்பிக்க திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டு உள்ளது. விரைவில் சீரமைப்பு பணிகள் துவங்கும்.
-பரத்,நெடுஞ்சாலை ஆய்வாளர், ஆத்துார்.
-