ADDED : ஜூன் 13, 2025 03:03 AM
குஜிலியம்பாறை: பாளையம் டாஸ்மாக் பாரில் கூவக்காபட்டி வெள்ளையகவுண்டனுார் சேல்ஸ்மேன் நவீன் குமார் 28, பணியில் இருந்துள்ளார்.
அங்கு வந்த பாளையம் ஜெகதீசன், கார்த்திக், பாலச்சந்திரன், பிரதீப், வான்ராயன்பட்டி குழந்தைவேல் ஆகியோர் ரூ.120 க்கு பொருட்களை வாங்கி கொண்டு பணம் தர மறுத்துள்ளனர்.
பணம் கேட்டதால் கோபமடைந்த ஐந்துபேரும் காலி மது பாட்டில்களை வீசி அடித்ததில் பொண்ணு வேல் காயமடைந்தார்.
ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் சேதமடைந்தது. ரகளையில் ஈடுபட்டவர்கள் குறித்து குஜிலியம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.