ADDED : ஜூன் 04, 2025 01:07 AM

திண்டுக்கல்: அரசு விதிமுறைகளுக்கு முரணாக பதவி உயர்வு வழங்கியதாக கூறி திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக வருவாய்த் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் சுகந்தி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜான் பாஸ்டின் டல்லஸ் முன்னிலை வகித்தார்.