ADDED : செப் 04, 2025 04:39 AM

திண்டுக்கல்: வருவாய்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு வாரம் 2 முகாம் மட்டும் நடத்த வேண்டும், திட்டப்பணிகளை மேற்கொள்ள கூடுதல் காலஅவகாசம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் கலெக்டர் அலுவலக வாசல் முன்பாக தமிழக வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 48 மணி நேர தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
மாவட்ட பொருளாளர் துரைராஜ் தலைமைவகித்தார்.
மாவட்ட செயலாளர் சுகந்தி பேசினார். மாவட்ட தலைவர் ஜான் பாஸ்டின், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி, விக்னேஷ் கலந்துகொண்டனர்.