/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குப்பையை கொட்டி தீ வைப்பதால் குடியிருப்பு வாசிகள் அவதி குப்பையை கொட்டி தீ வைப்பதால் குடியிருப்பு வாசிகள் அவதி
குப்பையை கொட்டி தீ வைப்பதால் குடியிருப்பு வாசிகள் அவதி
குப்பையை கொட்டி தீ வைப்பதால் குடியிருப்பு வாசிகள் அவதி
குப்பையை கொட்டி தீ வைப்பதால் குடியிருப்பு வாசிகள் அவதி
ADDED : செப் 19, 2025 02:16 AM

ஒயரை ஒழுங்குபடுத்தலாமே
திண்டுக்கல் கூட்டுறவு நகரில் இருந்து ஏ.கே.எம்.ஜி. நகர் செல்லும் ரோட்டில் கேபிள் ஒயர்கள் அறுந்து கீழே கிடக்கிறது. இதனால் வாகனங்களில் சிக்கி விபத்து அபாயம் உள்ளதால் ஒயரை ஒழுங்குபடுத்த வேண்டும். மாரிமுத்து, திண்டுக்கல்...................---------சேதமான மின்கம்பம்
அய்யலுார் கருவார்பட்டி ராமா நாயக்கர் களத்தில் மின்கம்பம் சேதமடைந்துள்ளது. இதை மாற்ற கொண்டுவரப்பட்ட மின்கம்பம் சில ஆண்டுகளாக அப்படியே கீழே கிடக்கிறது. விரைவில் இதை சீரமைப்பு செய்ய வேண்டும். -- சுப்பிரமணி, அய்யலுார்.................----------சேதமான அறிவிப்பு பலகை
திண்டுக்கல் - திருச்சி ரோடு ராஜலட்சுமி நகர் செல்லும் ரோட்டில் வைக்கப்பட்டுள்ள ஸ்பீடு பிரேக் அறிவிப்பு பலகை சேதமடைந்து கீழே விழுந்துள்ளது .இதை அரியாமல் வாகன ஓட்டிகள் செல்வதால் விபத்து ஏற்படுகிறது. முத்துக்குமார், திண்டுக்கல்.......----------
ரோடுகளில் பள்ளம்
திண்டுக்கல் அறிவுத்திருக்கோயில் ரோடு சேதமடைத்து பயன்படுத்தமுடியாத நிலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர. மழைக்காலங்களில் பள்ளங்கள் தெரியாமல் விபத்தும் நடக்கிறது. பாலன், ரோஜா நகர்.
...............-----------
வெளிச்சம் இல்லாமல் விபத்து
பழநி இடும்பன் மலை அருகே வள்ளியப்பா கார்டன் எதிரே உள்ள உயர் கோபுர மின் விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கி உள்ளது .இதனால் பக்தர்கள், பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாததால் விபத்து நடக்கிறது.விக்னேஷ், பழநி.
......-----------நாய்களால் அச்சம்
பழநி கிழக்கு பாட்டாளி தெரு சுற்றி தெரியும் நாய்களால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர் . சிறுவர்களை கடிக்க பாய்வதால் வெளியே வரவே அஞ்சுகின்றனர். இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.முருகேசன், பழநி.
................-----------குப்பையை கொட்டி தீ வைப்பு
திண்டுக்கல் லட்சுமி சுந்தரம் காலனி நாலாவது தெருவில் குப்பையை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர் .இதனால் அருகே குடியிருக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் .இங்கு குப்பையை கொட்டாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.லட்சுமி,திண்டுக்கல்.
...........