/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரோடு சேதத்தால் அவதிப்படும் பழநி 11வது வார்டு மக்கள் ரோடு சேதத்தால் அவதிப்படும் பழநி 11வது வார்டு மக்கள்
ரோடு சேதத்தால் அவதிப்படும் பழநி 11வது வார்டு மக்கள்
ரோடு சேதத்தால் அவதிப்படும் பழநி 11வது வார்டு மக்கள்
ரோடு சேதத்தால் அவதிப்படும் பழநி 11வது வார்டு மக்கள்

வெளிநபர்கள் நடமாட்டம்
பிச்சமுத்து, ஆட்டோ டிரைவர், மதுரை வீரன் கோவில் தெரு : நாய் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் தெருவில் பயணிக்கும் நபர்கள் மிகுந்த அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. சாக்கடையை துார் வார வேண்டும். எங்கள் பகுதியில் வெளிநபர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது இதனை கண்காணிக்க வேண்டும் .பொன் காளியம்மன் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தை சரி செய்ய வேண்டும். ரேஷன் கடை புதிய தாக கட்டப்பட்டு வரும் நிலையில் அதனை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
பொது மக்களுக்கு சிரமம்
மாரியப்பன், டீக்கடை உரிமையாளர், பெரிய கடை வீதி: கமிட்டி சுந்தரம் பிள்ளை தெரு சேதமடைந்துள்ளது. அருகில் உள்ள சாலைகள் சரி செய்யப்படும் நிலையில் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் சாலைகள் சரி செய்யப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். இதனால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். முதியவர்கள் தடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது.
கட்டுப்படுத்த நடவடிக்கை
பாசமலர், கவுன்சிலர் (தி.மு.க.,) : தெரசம்மாள் காலனியில் அங்கன்வாடி மையம், ரேஷன் கடை கட்டப்பட்டு வருகிறது. பொன் காளியம்மன் கோயில் தெருவில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கமிட்டி சுந்தரம் பிள்ளை உள்ளிட்ட சாலைகளில் பணி விரைவில் செய்ய கோரிக்கை விடுத்துள்ளேன். நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். போதை ஆசாமிகள், வெளி நபர்கள் நடமாட்டம் குறித்து போலீசாரிடம் தெரிவித்துள்ளேன். பொன்காளியம்மன் தெரு அங்கன்வாடி மையம் விரைவில் சரி செய்யப்படும் என்றார்.