Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/எரியோட்டில் ரோடு பள்ளங்கள் சீரமைப்பு

எரியோட்டில் ரோடு பள்ளங்கள் சீரமைப்பு

எரியோட்டில் ரோடு பள்ளங்கள் சீரமைப்பு

எரியோட்டில் ரோடு பள்ளங்கள் சீரமைப்பு

ADDED : ஜன 22, 2024 05:38 AM


Google News
Latest Tamil News
எரியோடு: தினமலர் செய்தி எதிரொலியாக எரியோட்டில் வடமதுரை இணைப்பு ரோட்டிலிருந்த பள்ளங்கள் மூடப்பட்டது.

எரியோடு அய்யலுார் ரோட்டில் அரசு ஆரம்ப சுகாதாரம் அருகில் பிரியும் ரோடு 500 மீட்டர் தொலையில் இருக்கும் வடமதுரை ஒட்டன்சத்திரம் ரோட்டில் சேர்கிறது. எரியோடு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் முக்கிய கட்சிகள் ரோடை மறித்து மேடை அமைத்து பொதுக்கூட்டம் நடத்தும் போது போக்குவரத்து தடைபடாமல் இருக்க பயன்படுகிறது. வெளி மாவட்ட பழநி பக்தர்கள் வாகனங்கள், கொம்பேரிபட்டி, பாகாநத்தம், சித்துவார்பட்டி, அய்யலுார் பகுதியினர் எரியோட்டிற்கு நுழையாமல் வெளிப்புறமாக பயணித்து வேடசந்துார் செல்ல இந்த ரோடு உதவுகிறது. கழிவுநீர் ரோட்டில் பாய்ந்து குண்டும், குழியுமாக மாறியது. விபத்துகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் பள்ளங்களை மூடினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us