ADDED : ஜன 11, 2024 05:03 AM
திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பிலிப்ஸ் சுதாகர்58.
இவரிடம் தனியார் குழுவில் சேர்ப்பதாக கூறி ரூ.14,660 ஆன்லைனில் மர்ம நபர்கள் மோசடி செய்தனர். இதேபோல் குட்டத்துப்பட்டியை சேர்ந்த வசந்தகுமார்25,என்பவரிடம் கோழிவிற்பனை செய்வதாக கூறி ரூ.8000 ஆயிரத்தை மர்ம நபர்கள் மோசடி செய்தனர். இதேபோல் திண்டுக்கல்லை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் ஆன்லைனில் மோசடியாக ரூ.1.40 லட்சத்தை ஏமாற்றினர். இவர்கள் மூவரும் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து மூவரும் இழந்த பணமான ரூ.1.62 லட்சத்தை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.