/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சந்திர கிரகணத்தை முன்னிட்டு பழநி கோயிலில் இன்று ராக்கால பூஜை, தங்கரத நேரம் மாற்றம் சந்திர கிரகணத்தை முன்னிட்டு பழநி கோயிலில் இன்று ராக்கால பூஜை, தங்கரத நேரம் மாற்றம்
சந்திர கிரகணத்தை முன்னிட்டு பழநி கோயிலில் இன்று ராக்கால பூஜை, தங்கரத நேரம் மாற்றம்
சந்திர கிரகணத்தை முன்னிட்டு பழநி கோயிலில் இன்று ராக்கால பூஜை, தங்கரத நேரம் மாற்றம்
சந்திர கிரகணத்தை முன்னிட்டு பழநி கோயிலில் இன்று ராக்கால பூஜை, தங்கரத நேரம் மாற்றம்
ADDED : செப் 07, 2025 03:27 AM
பழநி: பழநி முருகன் கோயிலில் இன்று சந்திர கிரகணம் நடைபெறுவதை முன்னிட்டு தங்கரத புறப்பாடு, ராக்கால பூஜை நேரம் மாற்றப் பட்டுள்ளது.
பழநி முருகன் கோயிலில் தினமும் இரவு 7:00 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும். ராக்கால பூஜை இரவு 9:00 மணிக்கு நடைபெறும். இந்நிலையில் இன்று இரவு 9:57 மணி முதல் நள்ளிரவு 1:26 மணி வரை பூரண சந்திர கிரகணம் நடைபெற உள்ளதால், இன்று மாலை 6:30 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும் நிலையில் ,பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து உப கோயில்களிலும் இரவு 7:45 மணிக்கு ராக்கால பூஜை நடைபெறும்.
பூஜை நிறைவடைந்த உடன் இரவு 8:00 மணிக்கு அனைத்து சன்னதிகளும் அடைக்கப்படும்.
பழநி முருகன் கோயிலில் இன்று பக்தர்கள் படிப்பாதை,வின்ச்,ரோப்காரில் இரவு 7:00 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
நாளை அதிகாலை 4:00 மணிக்கு மேல் கோயில்களில் ஸம்ப்ரோசஷன பூஜை ,ஜெபஹோமம்,நெய்வேத்தியம், தீபாராதனை நடைபெற்ற பின் விஸ்வரூப விநாயகர் தீபாராதனை, பள்ளியறையில் இருந்து எழுந்தருளல், விஸ்வரூப தரிசனம் நடைபெறும். அதன்பின் வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.