ADDED : செப் 21, 2025 04:39 AM
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் சதர்ன் ரயில்வே மஸ்துார் யூனியன் சார்பில் ரயில்வே ஊழியர்களுக்கு 8வது சம்பள கமிஷன் அமைக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு சட்டத்தை நீக்கவேண்டும், 10 சதவீத காலியிடம் இருந்தால்தான் பணியிட மாற்றம் எனும் உத்தரவை நீக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் 2வது நடைமேடையில் கோரிக்கை வலியுறுத்தல் போராட்டம் நடந்தது.
கிளைத் தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். கோட்டத்தலைவர் செந்தில்குமார் பேசினார்.
நிர்வாகிகள் ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.