ADDED : அக் 16, 2025 11:59 PM
வத்தலக்குண்டு: பேரூராட்சி பணியாளர்கள் , துாய்மை பணியாளர்களுக்கு பேரூராட்சி தலைவர் சிதம்பரம் சார்பில் புத்தாடை, இனிப்பு, பட்டாசு பொருட்கள் வழங்கப்பட்டது.
செயல் அலுவலர் சரவணகுமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார். தலைமை எழுத்தர் முருகேசன் வரவேற்றார். தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் முருகன், கனகதுரை, நகர செயலாளர் சின்னத்துரை வழங்கினார்.
கவுன்சிலர்கள் சிவக்குமார், மகாமுனி, மணிவண்ணன், ரவிச்சந்திரன் பங்கேற்றனர்.


