/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆடு, பீரோ பாத்திரங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் ஆடு, பீரோ பாத்திரங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
ஆடு, பீரோ பாத்திரங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
ஆடு, பீரோ பாத்திரங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
ஆடு, பீரோ பாத்திரங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
ADDED : செப் 03, 2025 01:09 AM

திண்டுக்கல் : தங்கள் மீது பதியப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கை திரும்ப பெற கோரி ஆடு, அடுப்பு, பீரோ, பாத்திரங்கள், குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவற்றுடன் நத்தம், பூதகுடி கிராமத்தை சேர்ந்த ஒரு சமூகத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பூதகுடி கிராம கோயில் திருவிழாவில் மைக் செட் கட்டுவதில் இரு சமூகம் இடையே பிரச்னை ஏற்பட்டது.
ஒரு சமூகத்தினர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கை திரும்ப பெறக்கோரி 300க்கு மேற்பட்ட அந்த சமுதாயத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.
அதன்படி தமிழ் தேசம் மக்கள் கட்சியினர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு ஆடு, டிவி, அடுப்பு, பீரோ, பாத்திரங்கள், குளிர்சாதன பெட்டிகளுடன் வந்தனர். நுழைவாயில் முன் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து கோஷங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுப ட்டனர். பின்னர் கலெக்டரிடம் மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.