ADDED : ஜூன் 24, 2024 04:38 AM
கன்னிவாடி : போதிய மழையின்மை அதிக வெப்பம் போன்ற பருவ நிலை மாற்றத்தால் விவசாயிகள் சாகுபடியை மாற்ற துவங்கினர்.
பருத்தி, கொத்தமல்லி சுண்டல் போன்ற பயிறு வகை உள்ளிட்ட பயறு வகை சாகுபடி 10 ஆண்டுகளாக இப்பகுதியில் குறைகிறது. சமீபத்தில் கோடை மழை பரவலாக பெய்து உள்ள சூழலில் கன்னிவாடி, தர்மத்துப்பட்டி, வீரக்கல் உள்ளிட்ட கரிசல் மண் பகுதியில் விவசாயிகள் பருத்தி சாகுபடியை துவக்க ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக நிலத்தை தயார்படுத்தும் பணிகள் மும்முரமாக நடக்கிறது.கரிசல்பட்டி விவசாயி அருள் கூறுகையில்,மக்காச்சோள சாகுபடி நட்டத்தை ஏற்படுத்தியதால் உழவு முதல் அறுவடை வரை பராமரிப்பதற்கான செலவு அதிகரித்தது. முந்தைய பருத்தி சாகுபடிக்கு மாறுவதன் மூலம் நட்டத்தை ஈடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.