/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம்பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம்
பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம்
பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம்
பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம்
ADDED : ஜன 08, 2024 05:09 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகைக்கான டோக்கன்களை ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று வழங்கிவருகின்றனர்.தைப்பொங்கலுக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்,இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் ஒரு கரும்பு, ரொக்கப்பணம் ரூ.1000 அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்க அரசு உத்தரவிடப்பட்டது. இதன்படி நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் வீடு வீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது. டோக்கனில்கடையின் பெயர், டோக்கன் எண், எந்த தேதியில் பொருட்களை வாங்க வேண்டும் என்பது பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணி நேற்று முதல் 3 நாட்கள் நடக்கிறது.
ஜன.10 முதல் 13- வரை டோக்கன் வரிசை, நாள்படி பொதுமக்கள் ரேஷன் கடைகளில் ரூ.1000த்துடன் பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். 3 நாட்களில் பொங்கல் தொகுப்பை வாங்காதவர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான ஜன.14ல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.புகார்கள் இருந்தால் 0451-2-460097 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.