ADDED : ஜூன் 04, 2025 01:10 AM
கொடைரோடு,: கொடைரோடு அருகே தர்மாபுரி கோயில் திருவிழா கலைநிகழ்ச்சியின் போது சி.புதுாரை சேர்ந்த நாகஅர்ஜூன் 28 ,டூவீலரில் சென்றார். போக்குவரத்துக்கு இடையூறாக தர்மாபுரியை சேர்ந்த சிலர் ரோட்டில் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை விலகி நிற்க சொல்லி நாகஅர்ஜூன் கூற அவரை அக்கிராமத்தை சேர்ந்த சிலர் தாக்கினர். அம்மையநாயக்கனூர் போலீசார் 9 பேர் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே இவர்களை கைது செய்யக்கோரி நாகஅர்ஜூன் உறவினர்கள் அம்மையநாயக்கனுார் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.