ADDED : ஜூன் 28, 2025 12:35 AM
லாட்டரி விற்ற 7 பேர் கைது
வேடசந்துார்: மாரம்பாடி ரோடு வசந்த நகர் சதீஷ் பேக்கரி கோடவுன் அருகே வெளிமாநில லாட்டரி டிக்கெட்களை விற்ற வேடசந்துாரை சேர்ந்த சீனிவாசன் 45, ரத்தினவேல் 51, உமர் பாரூக் 42, அக்பர் அலி 47, அன்சாரி 68, கிரியம்பட்டி சுப்பையன் 65, வெள்ளனம்பட்டி ராஜன் 52, ஆகிய ஏழு பேரை வேடசந்துார் போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி மாயம்
நத்தம்: அண்ணாநகரை சேர்ந்தவர் தொழிலாளி ஷேக்பாட்ஷா 42.இவருக்கும் இவரது மனைவிக்கும் ஜூன் 20- ல்தகராறு ஏற்பட்டுள்ளது. கோபமடைந்த ஷேக்பாட்ஷா வீட்டை விட்டு சென்று விட்டார். நத்தம் போலீசார் தொழிலாளியை தேடுகின்றனர்.
மது விற்றவர் கைது
நத்தம்: குட்டூர் பிரிவு அருகே புன்னப்பட்டியை சேர்ந்த கண்ணன் 48, மது பாட்டில்கள் விற்பனை செய்தார். இதையடுத்து இவரை நத்தம் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் கைது செய்தார். 46 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வம்பு வாலிபர் கைது
வடமதுரை: கோப்பம்பட்டியை சேர்ந்தவர் கோபிராஜன் 34. அதே பகுதியை சேர்ந்த மற்றொருவர் மனைவியிடம் அடிக்கடி பிரச்னை செய்து வந்தார். இதையடுத்து அந்த பெண்ணும் ஊர் முக்கியஸ்தர்களும் வடமதுரை போலீசில் புகார் செய்தனர். ஆத்திரமடைந்த கோபிராஜன் அப்பெண்ணிடம் சேலையை பிடித்து இழுத்து தள்ளி மிரட்டல் விடுத்தார். வடமதுரை போலீசார் அவரை தேடுகின்றனர்.
மாணவி தற்கொலை
வடமதுரை: அய்யலுார் குப்பாம்பட்டியை சேர்ந்தவர் ரேணுகா 16, அய்யலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்தார். சரிவர படிக்காததால் பெற்றோர் கண்டித்ததால் விஷ விதை சாப்பிட்டு இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் பலி
பழநி: பழநி கவுண்டன் குளத்தை சேர்ந்தவர் மயில்சாமி 65. அப்பகுதியில் நடந்து சென்ற போது டூவீலர் மோதியதில் இறந்தார். பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.