ADDED : ஜூன் 23, 2025 04:38 AM
பெண் கைது
ரெட்டியார்சத்திரம் : முத்தனம்பட்டியை சேர்ந்த சுப்பையா மனைவி பாண்டியம்மாள் 52. இவர் கருப்பணசாமி கோவில் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தார். வித்தியாசத்திரம் எஸ்.ஐ., கணேசன் தலைமையில் சென்ற போலீசார் இவரை கைது செய்தனர். 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
லாட்டரி பறிமுதல்
கன்னிவாடி : எஸ்.ஐ., சிராஜுதீன் தலைமையிலான போலீசார், தர்மத்துப்பட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். பஸ் ஸ்டாப் அருகே தெத்துப்பட்டியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் 42, தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
விபத்தில் பெண் பலி
எரியோடு : புதுரோட்டை சேர்ந்த நாகசுந்தரம் மனைவி அமுதா 60. நேற்று முன்தினம் இரவு ரோட்டில் நடந்து சென்ற போது அவ்வழியே வந்த டூவீலர் மோதி படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.