Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ போலீஸ் செய்திகள் ...

போலீஸ் செய்திகள் ...

போலீஸ் செய்திகள் ...

போலீஸ் செய்திகள் ...

ADDED : மே 13, 2025 05:17 AM


Google News
நுங்கு பறித்தவர் பலி

நத்தம்: மதுரை மாவட்டம் சேந்தமங்கலம்- மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி அருள்குமார் 32. மே 10 ல் நத்தம் அருகே புன்னப்பட்டியில் பனை மரத்தில் ஏறி நுங்குகள் பறித்துள்ளார். தடுமாறி விழுந்த அவர் நேற்று முன்தினம் இறந்தார். நத்தம் எஸ்.ஐ., தர்மர் விசாரிக்கிறார்.

தொழிலாளிக்கு வெட்டு

நத்தம்: பெரிய முளையூரை சேர்ந்தவர் குமரேசன் 60. அதே பகுதியை சேர்ந்தவர் கண்ணன் 48. இருவருக்கும் பிரச்னை இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. ஆத்திரமடைந்த கண்ணன் அரிவாளால் வெட்டி விட்டு தப்பினார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

குளத்தில் மூழ்கி பலி

பழநி: தில்லையாடி வள்ளியம்மை தெருவில் உள்ள தங்கம்மாள் வீட்டிற்கு பள்ளி விடுமுறை காரணமாக தேனி மாவட்டம் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த மாரிஸ் மகன் நரசிம்மன் 11, வந்தார். இடும்பன் குளத்தில் மூழ்கி இறந்தார் . பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

மாணவர் பலி

பழநி: மதனபுரத்தை சேர்ந்த ரவிசந்திரன் மகன் சஞ்சய் 17. சில நாட்களாக கல்லுாரி செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு இறந்தார். பழநி அடிவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

டூவீலர் திருடியஇருவர் கைது

திண்டுக்கல்: சத்யா நகரை சேர்ந்தவர் கருணாகரன். இவரது டூவீலர் திருட்டு போனது. தாடிக்கொம்பு போலீசார் விசாரணையில், திண்டுக்கல் மருதாணிகுளம் வெங்கடாசலபதி 45, வேடசந்துார் ஒத்தப்பட்டி நவீன்குமார் 25, திருடியது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

லாட்டரி விற்றவர் கைது

திண்டுக்கல்: மாலப்பட்டி பகுதியில் அப்பகுதியை சேர்ந்த இளங்கோ 45, லாட்டரி விற்றார். அவரை தாலுகா போலீசார் கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us