Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

ADDED : மார் 25, 2025 04:57 AM


Google News
பஸ் மோதி ஆடு பலி

வேடசந்துார்: வேடசந்துாரில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒட்டன்சத்திரம் சென்ற தனியார் பஸ் அய்யனார் நகர் மேம்பாலம் அருகே சென்ற போது ,அய்யனார் நகர் முருகேசன் 33, சொந்தமான ஆடு மீது மோதியதில் இறந்தது. வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தீக்குளித்த பெண் இறப்பு

நத்தம்: சேர்வீடு கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா 26.மனநலம் பாதிக்கப்பட்ட இவர் நத்தம் பஸ் ஸ்டாண்டில் சுற்றித் திரிவார். நேற்று முன்தினம் மதியம் பெட்ரோல் கேனுடன் திரிந்த பவித்ரா பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்து கொண்டார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கார் மோதி விவசாயி பலி

நத்தம்: பரளி- தேத்தாம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி வைரமணி 47. டூவீலரில் பெருமாள்பட்டி பகுதி பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கி விட்டு திரும்பினார்.லிங்கவாடி பிரிவு பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது மதுரை நோக்கி சென்ற கார் மோதியது.இதில் துாக்கிவீசப்பட்டு கீழே விழுந்த வைரமணி மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். நத்தம் எஸ்.ஐ., அருள்குமார் விசாரிக்கிறார்.

புகையிலை விற்றவர் கைது

நத்தம்: நத்தம் சுற்றுப்பகுதிகளில் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், எஸ்.ஐ.,தர்மர் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அண்ணாநகர் முஸ்லிம் தெற்கு தெருவைச் சேர்ந்த முகமது இசாக் வீட்டில் இருந்த தடை புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

நால்வருக்கு அரிவாள் வெட்டு

ஆயக்குடி: பழநி ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் பொன் தேவன் 20.இவருக்கும் அதே பகுதி அரவிந்த் 24, இடையே முன்விரோதம் இருந்தது . நேற்று முன்தினம் மாலை இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டி கொண்டனர். அரவிந்த் 24, காளிதாஸ் 28, பொன்தேவன் 20, செல்வராணி 37 , காயமடைந்தனர். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்தில் ஒருவர் பலி

ஆயக்குடி: பழநி சத்திரப்பட்டி வேலுாரை சேர்ந்தவர் சக்திவேல் 63. மின்வாரியத்தில் ஒப்பந்த பணியில் ஈடுபட்டு வருகிறார் .நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு டூ வீலரில் செல்லும் போது திண்டுக்கல் ரோடு ஐ.டி.ஓ., பள்ளி அருகே நிலை தடுமாறி விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us