/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.10 கோடி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க போலீசார் அழைப்பு ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.10 கோடி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க போலீசார் அழைப்பு
ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.10 கோடி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க போலீசார் அழைப்பு
ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.10 கோடி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க போலீசார் அழைப்பு
ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.10 கோடி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க போலீசார் அழைப்பு
ADDED : செப் 22, 2025 03:48 AM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில், ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்ற போலி வாக்குறுதி அளித்து ரூ.10கோடி வரை பணமோசடி நடந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே மாய்க்கநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி 38. இவர், திண்டுக்கல் நாகல் நகர் அருகே 'சென்டிரா' எனும் பெயரில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்திவந்தார். பல்வேறு முதலீடு திட்டங்கள் அறிமுகப்படுத்தி, அதன் அடிப்படையில் டிரேடிங்கில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் 1.5 சதவீதம் வட்டி கொடுப்பதாகவும், அதிக பணம் முதலீடு செய்தால் உத்திரவாதமாக ரூ.20 பத்திரத்தில் பதிவு செய்துக் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
இதை நம்பி, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஜாய்நிவாஸ் பாத்திமா நகரை சேர்ந்த கார்பெண்டரான மரிய ஆரோக்கியதாஸ் 45, என்பவர் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தார். ஆனால் கூறியபடி வட்டிப்பணம் தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மரிய ஆரோக்கியதாஸ், கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டுள்ளார். ஆனால் ஆண்டுக்கணக்கில் பணம் தராமல் ஏமாற்றியுள்ளார்.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் 2013ல் மரிய ஆரோக்கியதாஸ் புகார் அளித்தார். போலீஸ் விசாரணை நடத்தியதில், இதேபோல 500க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து ரூ.10கோடிக்கு மேல் முத்துசாமி பணமோசடி செய்திருப்பது தெரிந்தது. புகாரை திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,இமானுவேல் ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி விசாரிக்கின்றனர். எனவே 'சென்டிரா' நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் உரிய அசல் ஆவணங்களுடன் கதவு எண் 59, நேருஜி நகர், பூங்கா எதிரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் நேரில் ஆஜராகி புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.