ADDED : செப் 14, 2025 03:44 AM
வேடசந்துார்:வேடசந்துார் அனைத்து வர்த்தகர்கள் சங்கம், வாஸ் ,விகா பவுண்டேஷன் சார்பில் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை அறவே தவிர்த்து நகர் பகுதியை துாய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
அனைத்து வர்த்தக சங்கத் தலைவர் சுகுமார் தலைமை வகித்தார். செயலாளர் ராஜா, துணைத் தலைவர் பார்த்தசாரதி ,இணை செயலாளர் பழனிச்சாமி, வர்த்தக சங்க கவுரவ தலைவர் ஜெயராஜா, பொருளாளர் சந்திரன், சங்கத் தலைவர் தனபால், வாஷ் பவுண்டேஷன் மேலாளர் டாக்டர் சரண்யா பங்கேற்றனர்.