ADDED : செப் 09, 2025 04:36 AM
வேடசந்துார்: வேடசந்துார் திண்டுக்கல் ரோடு கிரியம்பட்டி பிரிவு அருகே ரோடு மறியல் நடைபெறுவதாக நேற்று மதியம் 12:30 மணிக்கு போலீசாருக்கு தகவல் பரவியது, ஹைவே பேட்ரோல் போலீசார், வேடசந்துார் போலீசார் என 10க்கு மேற்பட்டோர் அங்கு சென்று பார்த்த போது ரோடு மறியல் எதுவும் நடைபெறவில்லை.
அதற்கான அறிகுறியும் தெரியவில்லை. யாரோ ஒருவர் தவறான தகவலை கொடுத்து அனைவரையும் அலைக்கழித்தது தெரிய வந்தது.