ADDED : அக் 17, 2025 01:48 AM
திண்டுக்கல்: கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸாக தமிழக அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ,திண்டுக்கல் கிளை இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில் மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் இயக்கம் நடந்தது.
மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி தலைமையில் மனு அளித்தனர். செயலாளர் பாலச்சந்திர போஸ், பொருளாளர் தீத்தான், குழந்தைவேலு கலந்து கொண்டனர்.


