/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குப்பை கிடங்கு தீயில் எழும் புகையால் அல்லாடும் மக்கள் குப்பை கிடங்கு தீயில் எழும் புகையால் அல்லாடும் மக்கள்
குப்பை கிடங்கு தீயில் எழும் புகையால் அல்லாடும் மக்கள்
குப்பை கிடங்கு தீயில் எழும் புகையால் அல்லாடும் மக்கள்
குப்பை கிடங்கு தீயில் எழும் புகையால் அல்லாடும் மக்கள்
ADDED : ஜூன் 07, 2025 12:36 AM

பழநி பெரியப்பா நகரில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் தீ பற்றி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. புகை குடியிருப்பு, நகராட்சிக்கு சொந்தமான காய்கனி கமிஷன் மண்டி மார்க்கெட் பகுதியில் பரவி உள்ளது. பொதுமக்கள், வியாபாரிகள் சுவாச கோளாறு, மூச்சு திணறல் ஏற்படுகிறது . சுவாச நோய் உள்ளவர்களுக்கு பெரும் அவதியை ஏற்படுத்துகிறது. இதை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
.............
தீ கட்டுப்பட்டு வருகிறது
வாகனங்களில் தண்ணீர் கொண்டு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது தீ கட்டுப்பட்டு வருகிறது. காற்றின் வேகம் அதிகரிப்பால் புகை, மார்க்கெட் ,குடியிருப்பு பகுதிகளுக்கு செல்கிறது. கிடங்கில் குப்பையை கொட்டாமல் நேரடியாக பிரிக்கும் நடைமுறையை கையாண்டு வருகிறோம். கிடங்கில் இரும்பு பொருட்களை தேடி செல்லும் நபர்கள் பாதுகாப்பு கருதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
மனோஜ் குமார் ,நகராட்சி நகர் நல அலுவலர் ,பழநி .
................