பட்டத்து விநாயகர் கோயில் பாலாலயம்
பட்டத்து விநாயகர் கோயில் பாலாலயம்
பட்டத்து விநாயகர் கோயில் பாலாலயம்
ADDED : மே 26, 2025 03:00 AM

பழநி,: பழநி பட்டத்து விநாயகர் கோயிலில் கருவறை பாலாலய யாகம் நடைபெற்றது.
பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் காந்தி ரோட்டில் உள்ள பட்டத்து விநாயகர் கோயில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயில் கும்பாபிஷேகம் நடைபெற தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் சிவன், நவகிரக சன்னதிகளின் பாலாலயம் நடைபெற்றது. இதில் யாக பூஜைகள் நடைபெற்று கருவறை பாலாலயம் அத்தி மரத்தில் செய்யப்பட்டது. யாக குண்டத்தில் வைக்கப்பட்ட கலச புனித நீரில் அபிஷேகம் நடைபெற்றது. வாஸ்து பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, கண்காணிப்பாளர் அழகர்சாமி கலந்து கொண்டனர்