ADDED : அக் 17, 2025 01:48 AM
வடமதுரை: அய்யலுாரில் சர்வீஸ் ரோட்டில் ஆட்டுச்சந்தை நடந்தால் அரசு பஸ்கள் மேம்பாலம் வழியே பயணிக்க பஸ்சிற்காக காத்திருந்த பயணிகள் மேம்பாலத்தில் குறுக்கே மறியல் செய்து பஸ்சை மறித்து அதில் ஏறி சென்றனர்.
அய்யலுாரில் நேற்று தீபாவளி பண்டிகைக்காக ஆடு, கோழி, பந்தய சேவல் நடந்தது.
இதில் பெரும்பகுதி வியாபாரம் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டிலே நடந்தது. இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சர்வீஸ் ரோட்டில் எந்த பஸ்சும் வரவில்லை.
வடமதுரை, திண்டுக்கல் பள்ளிகளுக்கு பஸ்களில் செல்லும் மாணவர்கள், தொழிலாளர்கள் நீண்ட நேரம் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தனர்.
பஸ்கள் மேம்பாலம் வழியே செல்வதையறிந்து அங்கு சென்று ரோட்டின் குறுக்கே நின்று மழையில் நனைந்தபடி பஸ்சை மறித்து ஏறி சென்றனர்.


