ADDED : மே 29, 2025 01:59 AM

பாலசமுத்திரம்: பழநி பாலசமுத்திரத்தில் உள்ள பாலாறு-பொருந்தலாறு அணை நீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டது. நேற்று (மே 28) முதல் செப். 24 வரை 120 நாட்களுக்கு தினமும் 15 கன அடி வீதம் 155.52 மில்லியன் கன அடிக்கு மிகாமல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதன்படி தாடாகுளம் பாசன பரப்பு பகுதிகளில் 501 ஏக்கர் பாசன நிலம், இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது அணையின் நீர் இருப்பு 34 அடி (65 ) உள்ள நிலையில் அணைக்கு நீர் வரத்து 9 கன அடியாக உள்ளது.