/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பயன்பாட்டிற்கு வந்தது பழநி கோயில் 3வது வின்ச்பயன்பாட்டிற்கு வந்தது பழநி கோயில் 3வது வின்ச்
பயன்பாட்டிற்கு வந்தது பழநி கோயில் 3வது வின்ச்
பயன்பாட்டிற்கு வந்தது பழநி கோயில் 3வது வின்ச்
பயன்பாட்டிற்கு வந்தது பழநி கோயில் 3வது வின்ச்
ADDED : ஜன 25, 2024 05:41 AM

திண்டுக்கல்: பழநி முருகன் கோயில் 3 வது வின்ச் தினமலர் செய்தி எதிரொலியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.
பழநி முருகன் கோயிலில் இன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர். மலைக்கு செல்ல படிப்பாதை தவிர 2 வின்ச், ரோப்கார் செயல்பட்டு வருகின்றன. 2 வின்ச்கள் பயன்பாட்டில் இருந்தன. 3 வது வின்ச் தயார் செய்யப்பட்டு அனைத்து சோதனைகளும் முடிந்தும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து 3 வது வின்ச் சேவையினை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார். எம்.பி., வேலுச்சாமி, எம்.எல்.ஏ., செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன்,சத்யா, கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, ஆர்.டி.ஓ., சரவணன், நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, துணைத்தலைவர் கந்தசாமி கலந்து கொண்டனர்.