ADDED : மே 17, 2025 02:23 AM

பழநி: பழநி முருகன் கோயிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. ரூ. 2 கோடியே 74 லட்சத்து 24 ஆயிரத்து 650, வெளிநாட்டு கரன்சி 291, 571 கிராம் தங்கம், 11.856 கிலோ வெள்ளி கிடைத்தது.
திருப்பூர், கோபி, பழநி, கோயமுத்துார் பகுதி உழவாரப்பணி ஸ்ரீ வாரி சேவா சங்கம், சிவனடியார் கூட்டமைப்பு, மகாவிஷ்ணு சேவா சங்கம், நாமக்கல் சிவனடியார் திருக்கூட்டத்தினர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.