/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாநில அளவில் சாதித்த ஒட்டன்சத்திரம் மாணவர் மாநில அளவில் சாதித்த ஒட்டன்சத்திரம் மாணவர்
மாநில அளவில் சாதித்த ஒட்டன்சத்திரம் மாணவர்
மாநில அளவில் சாதித்த ஒட்டன்சத்திரம் மாணவர்
மாநில அளவில் சாதித்த ஒட்டன்சத்திரம் மாணவர்
ADDED : மே 17, 2025 01:43 AM

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் சி.மணிஷ்குமார் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 500க்கு 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளார்.
ஒட்டன்சத்திரம் தர்மத்துப்பட்டியை சேர்ந்த முன்னாள் படை வீரர் சந்திரசேகர், போலீஸ் தலைமை காவலர் ராணி மகன் மணிஷ் குமார் . இவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பாடவாரியாக தமிழ் 98, ஆங்கிலம் 100, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100 என 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளார் . மணிஷ்குமார் கூறியதாவது:
பள்ளியில் நடத்தும் பாடங்களை தினமும் தெளிவாக படித்து விடுவேன். சந்தேகம் இருப்பின் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்வேன். சிறப்பு வகுப்புகள் எதற்கும் செல்லவில்லை. பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர் கொடுத்த ஊக்கம் காரணமாக என்னால் மாநில அளவில் சாதனை படைக்க முடிந்தது என்றார்.