ADDED : ஜன 29, 2024 06:16 AM

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டம் தரகுமண்டி குமாஸ்தாக்கள் திருமண மண்டபத்தில் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் வைகை பாலன் முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் பசும்பொன் வரவேற்றார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு பேசினார். முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன்,கு.பா. கிருஷ்ணன், வைத்தியலிங்கம்,எம்.எல்.ஏ.,மனோஜ் பாண்டியன், கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ., சுப்புரத்தினம் பங்கேற்றனர்.