ADDED : ஜன 04, 2024 02:49 AM

சாமிநாதபுரம்: பழநி புஷ்பத்துார் அருகே நான்குவழிச் சாலையில் சென்ற லாரி, சரக்கு வேன் மோதியதில் ஒருவர் பலியானார்.
பழநி புஷ்பத்துார் நான்கு வழிச்சாலை சேவை சாலை சந்திப்பு அருகே அரிசி ஏற்றி சென்ற லாரி தேங்காய் ஏற்றி வந்த சரக்கு வேன் லாரியின் பின்புறம் மோதியது.
சரக்கு வேனில் வந்த திருப்பூர் மாவட்டம் ருத்ராபாளையத்தைச் சேர்ந்த பிரபு 38, குமரலிங்கத்தைச் சேர்ந்த சங்கீதா 29 ,குமரலிங்கத்தைச் சேர்ந்த தங்கவேல் 58, லாரியில் வந்த செல்லப்பன், செந்தில் காயமடைந்தனர்.
இதில் தங்கவேல் 58, இறந்தார் பழநி சாமிநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.