ADDED : செப் 04, 2025 04:31 AM

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. பள்ளி மைதானத்தில் அத்த பூ கோலம் , கேரள பாரம்பரிய உடை அணிந்து வந்த பள்ளி சிறார்கள் செண்டை மேளத்திற்கேற்ப கதகளி நடனமாடினர்.
பள்ளி ஆசிரியர்கள் ஒரே சீருடையில் அத்தப்பூ கோலத்தை சுற்றி திருவாதிரை நடனமாடினர். பள்ளி முதல்வர் பால்ராஜ் , ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.