ADDED : பிப் 11, 2024 01:24 AM
வேடசந்துார்: வேடசந்துார் கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ரெத்தனகவுண்டர் 65. ஒட்டன்சத்திரம் ரோட்டில் அரசு கால்நடை மருத்துவமனை முன்பு ரோட்டை கடக்க முயன்றார்.
அப்போது கெண்டையகவுண்டனுாரை சேர்ந்த சரத்குமார் 35, ஓட்டி வந்த கார் மோதியது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இறந்தார். வேடசந்துார் எஸ்.ஐ., வேலுமணி விசாரிக்கிறார்.