ADDED : ஜன 04, 2024 02:42 AM
திண்டுக்கல்: அரசியல் தலையீடுகளை கட்டுப்படுத்த வேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஒரு பணி விதியை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம்நடந்தது.
வட்டார தலைவர் கான்டீபன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் வீரகடம்பு கோபு,ராஜசேகர்பங்கேற்றனர்.
பழநி :பழநியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் சார்பில் ஒன்றிய அலுவலகம் முன்பு வட்டக் கிளை தலைவர் மகுடபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் பணியிடமாறுதல் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் அதே இடத்தில் பணியை அமர்த்த வலியுறுத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நளினா, கண்ணன் பங்கேற்றனர்.