/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/குடகனாற்றில் கருவேல முட்கள்; தண்ணீர் வந்தா கூட தெரியலகுடகனாற்றில் கருவேல முட்கள்; தண்ணீர் வந்தா கூட தெரியல
குடகனாற்றில் கருவேல முட்கள்; தண்ணீர் வந்தா கூட தெரியல
குடகனாற்றில் கருவேல முட்கள்; தண்ணீர் வந்தா கூட தெரியல
குடகனாற்றில் கருவேல முட்கள்; தண்ணீர் வந்தா கூட தெரியல

டெண்டர் மூலம் அகற்றுவாங்களாம்
த.ராமசாமி, குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர், வேடசந்துார் :தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் பிடிப்பு பகுதிகளிலும் உள்ள கருவேல முட்களை அகற்றக் கோரிய வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சிலர் தடை உத்தரவு பெற்றனர். தற்போது அந்தத் தடை உத்தரவும் நீக்கப்பட்டு விட்டது. கருவேல முட்களை அகற்றுவதில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். குடகனாறு பகுதியில் உள்ள கருவேல முட்களை அகற்ற பொதுப்பணி துறையிடம் அனுமதி கேட்டோம். அதற்கு நாங்கள் டெண்டர் தான் விடுவோம். நீங்கள் வேண்டுமானால் டெண்டர் எடுத்து முட்களை அகற்றுங்கள் என தெரிவித்தனர். அதன் பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை. மாவட்ட நிர்வாகமாவது உயர் நீதிமன்ற உத்தரவுப்படி குடகனாறு பகுதியில் உள்ள கருவேல முட்களை அகற்ற வேண்டும் .
குளிக்க கூட முடியல
ஆர்.எம்.நடராஜன், தமிழக விவசாயிகள் முன்னேற்ற சங்கம், இளைஞரணி தலைவர், வேடசந்துார்:கருவேல முட்களால் விவசாயம் பாழ்பட்டு விட்டது. இந்த குடகனாற்றில் எந்த இடத்திலும் மக்கள் இறங்கி குளிக்கவோ, நடந்து செல்லவும், கடந்து செல்லவும் முடியாது. ஆற்றில் தண்ணீர் வந்த போது கூட வேடசந்துார் பாலம் பகுதியில் நின்று தான் தண்ணீரை பார்க்க முடிந்தது. வேறு எங்கும் தண்ணீர் கண்ணுக்கு தெரியவில்லை. காரணம் முட்களுக்கு இடையே தான் தண்ணீர் செல்கிறது. குடகனாறு அணை ஆற்றின் வழி வழி நெடுகிலும், அணைக்கட்டு பகுதியிலும் உள்ள கருவேலன் முட்களை அரசு அகற்ற வேண்டும்.
தீர்வு
குடகனாற்றில் வழி நெடுகிலும் கருவேல முட்கள் நிறைந்து காணப்படுவதால் பாம்பு தொல்லைகளுக்கு பயந்து மக்கள் ஆற்றுக்குள் இறங்கவே அச்சப்படுகின்றன. நிலத்தடி நீரும்