/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வராத குடிநீர், டவுன் பஸ்கள்; சிக்கலில் முத்துநகர் - வேதாத்திரி நகர் குடியிருப்போர் வராத குடிநீர், டவுன் பஸ்கள்; சிக்கலில் முத்துநகர் - வேதாத்திரி நகர் குடியிருப்போர்
வராத குடிநீர், டவுன் பஸ்கள்; சிக்கலில் முத்துநகர் - வேதாத்திரி நகர் குடியிருப்போர்
வராத குடிநீர், டவுன் பஸ்கள்; சிக்கலில் முத்துநகர் - வேதாத்திரி நகர் குடியிருப்போர்
வராத குடிநீர், டவுன் பஸ்கள்; சிக்கலில் முத்துநகர் - வேதாத்திரி நகர் குடியிருப்போர்
ADDED : மே 21, 2025 06:14 AM
திண்டுக்கல்; ரேஷன் கடைக்கு செல்ல திருச்சி பைபாஸ் ரோட்டை கடக்க வேண்டிய நிலை, டவுன் பஸ்கள் இல்லாததல் சிரமம், குண்டும்,குழியுமான ரோடுகள், வராத குடிநீர் என பல்வேறு சிக்கலை திண்டுக்கல் முத்துநகர் - வேதாத்திரி நகர் குடியிருப்போர் சந்தித்து வருகின்றனர்.
திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள முத்துநகர் - வேதாத்திரி நகர் குடியிருப்போர் நலச்சங்க முன்னாள் தலைவர்கள் துரைசிங், ஜெயராமன், பொருளாளர் சிவசங்கரன், இணைச்செயலர் ஜெயக்குமார் கூறியதாவது : பிரதான ரோடான அறிவுத்திருக்கோயில் ரோடு மோசமாக உள்ளது. ஆங்காங்கே பெயர்ந்து கிடக்கிறது.
இதனால், வாகன ஓட்டிகள் முதல் பாதசாரிகள் வரை சிரமத்திற்கு உள்ளாகிறோம். வேதாத்திரி நகர், காந்திஜி தெரு, வ.உ.சி., தெரு, பாரதியார் ,திருவள்ளுவர் தெருக்களில் உள்ள 150 க்கு மேற்பட்ட வீடுகளுக்கு ஜல்ஜீவன் திட்டப்படி குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.3 ஆயிரம் காப்புத்தொகை, குடிநீர் வரியாக ரூ.600 என செலுத்துகிறோம். ஆனால் இதுவரை ஒருநாள் கூட தண்ணீர் வரவில்லை. காவிரி குடிநீர் குழாயோடு இணைக்காதததும், மேல்நிலைத்தொட்டி இல்லாததாலும் தண்ணீர் வருவதில்லை. எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுப்பதில்லை. எங்கள் குடியிருப்பு பகுதிகளில் 800 க்கு மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். ஆனால் நாங்கள் பைபாஸ் ரோட்டை கடந்து ரேஷன் கடைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. நாள்தோறும் அச்சத்துடனே பயணிக்கும் சூழல் உள்ளது. இதனால் எங்கள் பகுதியிலே ரேஷன் கடை அமைத்துத்தர கோரி பல முறை மனு அளித்தும், முறையிட்டும் பார்த்தோம். அதிகாரிகள் இடத்தையும், வாடகையையும் கொடுங்கள் என தெரிவிக்கின்றனர். குறிப்பாக ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல எங்கள் பகுதி வழியாக செல்வதற்கு டவுன்பஸ்கள் இல்லை. தனியார் வாகனங்களை தேட வேண்டியுள்ளது. எங்கள் பகுதி செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்குள் வருகிறது. தற்போது மாநகராட்சியடன் இணைக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். இதற்கு நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். அவ்வாறு இணைத்தால் பல பாதிப்புகள் ஏற்படும்.
தெரு நாய்களின் தொல்லை அதிகம் உள்ளது. நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகமாகிறதே தவிர குறைந்தபாடில்லை. கொசுத்தொல்லையும் உள்ளது. குழந்தைகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். குப்பை சேகரிக்கும் பணியில் தொய்வு உள்ளது. குப்பையை எங்கே கொட்டுவதென தெரிவதில்லை. எவரும் அள்ளுவதில்லை. நோய் ஏற்படும் சூழல்தான் உள்ளது என்றனர்.