/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரயில்வே ஸ்டேஷனில் வாகனங்களுக்கு இல்லை பாதுகாப்பு ரயில்வே ஸ்டேஷனில் வாகனங்களுக்கு இல்லை பாதுகாப்பு
ரயில்வே ஸ்டேஷனில் வாகனங்களுக்கு இல்லை பாதுகாப்பு
ரயில்வே ஸ்டேஷனில் வாகனங்களுக்கு இல்லை பாதுகாப்பு
ரயில்வே ஸ்டேஷனில் வாகனங்களுக்கு இல்லை பாதுகாப்பு
ADDED : மே 18, 2025 03:06 AM

திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் வாகனங்கள் நிறுத்தும் இடவசதி குறைவாக உள்ளது. ஒரு புறம் ரயில் நிலைய அலுவலர்கள், ஊழியர்கள் வாகனம் நிறுத்த இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மறுபுறம் பயணிகள் டூவீலர்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடமும் சிறிய அளவிலே உள்ளது. கடைசி பகுதியில் டூவீலர்கள் திறந்தவெளியில் நிறுத்தப்படுகின்றன.இடப்பற்றாக்குறை ஏற்படும் போது எதிர்புறம் இருக்கும் திறந்தவெளி இடத்தில் கூரையின்றி டூவீலர்கள், கார்கள், நிறுத்தப்படுகின்றன. வெயில் , மழையில் நனைகின்றன . வாகனம் நிறுத்துபவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் உள்ளது.
,,,,,,,,,,,,,,,,,,,
2026 மார்ச்சில் சரியாகி விடும்
கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் எதுவும் வரவில்லை. எனினும் இதுபற்றி விசாரிக்கிறேன். ரூ.30 கோடியில் மறுகட்டமைப்பு பணிகள் நடக்கின்றன. 2026 மார்ச்சில் பயன்பாட்டிற்கு வந்துவிடும். அப்போது வாகனங்கள் நிறுத்த உரிய வசதிகள் கிடைக்கும்.
சத்தியமூர்த்தி, கோட்ட வர்த்தக ஆய்வாளர்,திண்டுக்கல்.
.........