ADDED : மே 30, 2025 03:38 AM
வேடசந்துார்: வேடசந்துார் தண்ணீர்பந்தம் பட்டியில் அரசு கலைக் கல்லுாரி உள்ளது. இங்கு 800 க்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
காலையில் வேடசந்துாரில் இருந்து கல்லுாரி செல்வதற்கு தனியாக பஸ் வசதி எதுவும் இல்லை.
வேடசந்துார் எரியோடு ரோட்டில் காலை 8:15 மணிக்கு செல்லும் அரசு டவுன் பஸ்சில் கூட்டத்தோடு கூட்டமாக மாணவர்கள் செல்கின்றனர். இதை விட்டால் காலையில் பஸ் வசதி இல்லை. இதேபோல் திண்டுக்கல்லில் இருந்து கல்லுாரிக்கு வரவும் பஸ் வசதி இல்லை. மாலை 3:10 க்கு திண்டுக்கல், வேடசந்துார் செல்ல மட்டுமே பஸ் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் நலன் கருதி வேடசந்துாரிலிருந்து தினமும் காலை 8:45 மணி, திண்டுக்கல்லில் இருந்து காலை 8:00 மணிக்கு கல்லுாரிக்கு அரசு பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.