/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சமரச தீர்வுமைய வழக்குகளை விரைந்து முடிக்க புதிய அமைப்பு சமரச தீர்வுமைய வழக்குகளை விரைந்து முடிக்க புதிய அமைப்பு
சமரச தீர்வுமைய வழக்குகளை விரைந்து முடிக்க புதிய அமைப்பு
சமரச தீர்வுமைய வழக்குகளை விரைந்து முடிக்க புதிய அமைப்பு
சமரச தீர்வுமைய வழக்குகளை விரைந்து முடிக்க புதிய அமைப்பு
ADDED : ஜூலை 05, 2025 03:10 AM
திண்டுக்கல்: சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அனைத்து மாவட்ட சமரச தீர்வு மையங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க Mediation for the nation அமைப்பு துவங்கப்பட்டுள்ளது.
அதன்படி திண்டுக்கல் மாவட்ட சமரச தீர்வு மையத்தில் ஜூலை 1 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ள இந்த அமைப்பு செப்., 30 வரை வாரத்தின் 7 நாட்களும் செயல்படும். நிலுவையில் உள்ள வழக்குகளை சுமூகமாக பேசி முடிப்பதற்கு நேரடியாகவோ, கானொளி வழியாகவோ இந்த அமைப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.