Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பள்ளிகளில் ஆங்கில வழி மாணவர் சேர்க்கை நடைமுறைகளில் தேவை கண்காணிப்பு

பள்ளிகளில் ஆங்கில வழி மாணவர் சேர்க்கை நடைமுறைகளில் தேவை கண்காணிப்பு

பள்ளிகளில் ஆங்கில வழி மாணவர் சேர்க்கை நடைமுறைகளில் தேவை கண்காணிப்பு

பள்ளிகளில் ஆங்கில வழி மாணவர் சேர்க்கை நடைமுறைகளில் தேவை கண்காணிப்பு

ADDED : மார் 22, 2025 04:37 AM


Google News
Latest Tamil News
பொருளாதார பாகுபாடின்றி அனைவருக்கும் கல்வியை வழங்கும் வகையில் மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

இவற்றின் தரத்தை மேம்படுத்தும் வகையில் அவ்வப்போது புதிய செயல்முறைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் ஆங்கில வழி கல்வி முறையை 5 ஆண்டுகளுக்கு முன் அரசு நடைமுறைப்படுத்தியது. முதற்கட்டமாக ஒன்றியம் வாரியாக 10 பள்ளிகள் என அறிமுகப்படுத்தப்பட்ட இம்முறை அடுத்த சில மாதங்களிலே அனைத்து பள்ளிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டது. இருப்பினும் இதற்கான கூடுதல் ஆசிரியர் பணியிடங்களோ பயிற்சி முறைகளோ உரிய கட்டமைப்புகள் மூலம் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

2019, 2020, 2021 கல்வி ஆண்டுகளின் துவக்கத்தில் இந்த முறைக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. இருப்பினும் பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்களின் மறைமுக ஒத்துழையாமை முயற்சிகளால் இதன் இருட்டடிப்பு தன்மை வெகுவாக அதிகரித்தது. ஆங்கில வழி மாணவர் சேர்க்கையை தவிர்த்து தமிழ் வழியில் சேர்க்கையை பெற்றோர்களிடம் வலியுறுத்தி ஆசிரியர்களின் 'கேன்வாஸ்' நடந்தது.

இதற்கேற்ப ஆங்கில வழி கல்விக்கான ஆசிரியர்கள், பாடப் புத்தகங்கள், பயிற்று முறையில் கூடுதல் கவனம் அளிக்க முடியாது என்பது உள்ளிட்ட காரணங்களை கூறி தனியார் பள்ளிகளுக்கு அனுப்பும் போக்கு தொடர்ந்தது. இதையடுத்து பல அரசு துவக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 1, 6ம் வகுப்புகளில் மூன்று இலக்க எண்ணிக்கையில் இருந்த மாணவர் சேர்க்கை தற்போது ஓரிலக்க நிலைக்கு தள்ளப்பட்டன. பெரும்பாலான கிராமப்புற பள்ளிகள் மூடப்படும் அவல நிலையை எட்டியுள்ளன.

உள்ளாட்சி பிரதிநிதிகள், சுய உதவி குழுவினர், தொண்டு நிறுவனத்தினர், பெற்றோர் ஆகியோரை கொண்ட பள்ளி மேலாண்மை குழு சமீபத்தில் உருவாக்கப்பட்டன. இதுவும் முடங்கி கிடக்கிறது.அரசு பள்ளிகளின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில் பள்ளி மேலாண்மை குழுக்களை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us